Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 நவம்பர் 20 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ், அவரது குழந்தைகள் மனைவி உடட்பட குடும்பத்துடன் ஒரு மாத்தில் கொல்லப்படுவார்கள் என கடிதமூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் என்னையும் எங்கள் செயற்பாட்டாளர்களையும் பின்வாங்க செய்வது பகற்கனவாகும்“ என கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் வீட்டில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் சனிக்கிழமை (19) பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சிரமதான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன் அப்போது எனது வீட்டுக்கு தபால் மூலம் கொலை அச்சுறுத்தல் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக எனது மனைவி தெரிவித்தார்.
அதில், வருகின்ற ஒரு மாதத்துக்குள் உனது பிள்ளைகள் மனைவி முதலில் கொலை செய்யப்படுவார்கள். அதன் பின்பு ஒரு மாதத்தில் உன்னை வீதியிலே நாயை அடித்து கொல்வதை போல கொலைச் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கள் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலே கிட்டத்தட்ட ஆரம்ப காலத்தில் இருந்து எங்களுடைய மக்களுடைய உரிமைகளை பெறுவதற்காக செயற்பாட்டாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்றேன்.
எனக்கு இவ்வாறான ஒரு கடிதம் கிடைத்ததையிட்டு எனது குடும்பம் பிள்ளைகளை பாதுகாப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறான அச்சுறுத்தல் மூலம் என்னையும் எங்கள் செயற்பாட்டாளர்களையும் பின்வாங்க செய்வது பகற்கனவாகும் என்றார்.
இந்த நிலமைகளை கருத்தில் கொண்டு எமது செயற்பாடுகளை முடக்கிவிடமாட்டோம் தொடர்ந்தும் எமது மக்களுக்கான உரிமைக்கான பணி தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடரும் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் எங்களை எந்த விதத்திலும் அச்சுறுத்த முடியாது.
இந்த நாட்டிலே இன்னும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மிகவும் ஒரு மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் மத்தியிலே வாழந்து கொண்டிருக்கின்றனர். இதனை சர்வதேச சமூகம் கருத்தில் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளில் செயற்படவேண்டும் என்றார்.
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago