2025 மே 22, வியாழக்கிழமை

அமோக வரவேற்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்து துறைமுகங்களையும் துவிச்சக்கர வண்டியில் சுற்றி வரும் இளைஞனுக்கு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபனத்தின் நாற்பத்தைந்தாவது (45) வருட பூர்த்தியை முன்னிட்டு அதன் ஊழியர் ஒருவர் இலங்கையிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் அனைத்தையும் துவிச்சக்கர வண்டியில் சுற்றி வருகிறார்.

இலங்கை மீன்பிடி துறைமுக சட்டவாக்க கூட்டுத்தாபன ஊழியரான ரி.பி.கொஸ்ஸா என்பவரே இவ்வாறு வலம் வருகிறார்.

 நேற்று(28) காலை ஹம்பாந்தோட்டை கிரிந்தையில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர்  இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்தார்.பின்னர் இன்று(29) காலை அங்கிருந்து தனது பணத்தை ஆரும்பித்துள்ள அவர் திருகோணமலை துறைமுகத்தை சென்றடையவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .