2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அம்பிட்டி சுமணரத்ன தேரருக்கு பிணை

Editorial   / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு – பன்குடாவெளியில், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கி, அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதமன்றின் ஆஜரான மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல நீதவான், இன்று (30) அனுமதி வழங்கினார்.

செப்டம்பர் மாதம்  21அம் திகதி, அம்பிட்டி சுமணரத்ன தேரர் உட்பட மூவர் பன்குடாவெளியில் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்டு ஆய்வுக்குட்படுத்தபடும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை அவ்விடத்துக்கு வரவைழைத்து அதிகாரிகள் மூவரை கடுமையாக தாக்கி, தகரக் கொட்டிலுக்குள் சிறைப்பிடித்து வைத்திருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகரிகளின் முறைப்பாட்டுக்கமைய, கரடியனாறு பொலிஸாரால் ஏறாவூர் சுற்றுலா நீதவான நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில், நீதவான் ஜீவராணி கருப்பையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அரச தரப்பு சட்டத்தரணிகள், பொலிஸாரால் கடுமையான எதிப்பு வெளியிட்ட நிலையில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக சந்தேகநபர்கள் மூவரையும் தலா இரண்டு இலட்சம் கொண்ட சரீரப் பிணையின் செல்ல அனுமதி வழங்கியதுடன், வழக்கு விசாரணையை நவம்பர் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X