Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 03 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
“வாழைச்சேனை மற்றும் சந்திவெளிச் சம்பவங்களுக்கும் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இடையில், எந்தவிதமான தொடர்பும் கிடையாது” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
வாழைச்சேனை, சந்திவெளி மற்றும் கிரான் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற வேண்டத்தகாத சம்பவங்கள் தொடர்பில், ஊடகங்களுக்கு நேற்று (02) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“வேண்டத்தகாத சம்பவங்களுடன், எமது தலைவருக்குத் தொடர்பு இருப்பதாக அவரைத் தொடர்புபடுத்தி சிலர்
கருத்துக் கூறியுள்ளனர். இது அவர் மீது கூறும் அபாண்டமாகும். இந்தச் சம்பவங்களுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான், விடுதலைப்புலிகளுடன் இருந்த காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளைப் பள்ளிவாசல் சம்மேளனத்தினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர். அவரோ அல்லது எமது கட்சியோ ஒரு போதும் இவ்வாறான சமூக ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளாது. இந்த நாட்டில் எந்தவொரு சமூகமும் எந்த இடத்திலும் சென்று வியாபாரம் செய்வதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன” என்றார்.
“எனவே, அதை யாரும் தடுக்க முடியாது. வாழைச்சேனை பஸ்தரிப்பிட கட்டட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட, அரசியல்வாதிகள் இருவர், மக்கள் பிரதிநிதிகள், இவர்களிருவருமே அந்த பஸ்தரிப்பு நிலையக் கட்டடத்துக்கான தீர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
“இவ்வாறான முரண்பாடுகள் வருகின்ற போது சமூகங்கள் முட்டி மோதி கலவரத்தை ஏற்படுத்தாமல் அறிவு பூர்வமாக பேசி முடிவெடுத்து அதனைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் புத்திஜீவிகள் சமூகப் பிரமுகர்கள் முன்னின்று, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025