Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 10 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் புதிய அதிபராக எம்.சி. ஜுனைட், இன்று (10) கடமைப் பொறுப்பேற்றார்.
இந்தக் கலாசாலையில் இதுவரை அதிபராக இருந்த வி.பரமேஸ்வரன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, புதிய அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
01.09.1945ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 22வது அதிபர் இவராவானர்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இன்று நடைபெற்ற பதியேற்பு, பதவி கையளிப்பு நிகழ்வில், கலாசாலையின் புதிய அதிபர் ஜுனைட், முன்னாள் அதிபர் பரமேஸ்வரன் உட்பட கலாசாலை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
புதிய அதிபர், இதற்கு முன்னர் மட்டக்களப்பு – தாழங்குடா கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாகவும் அக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
44 minute ago
52 minute ago
1 hours ago