Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 நவம்பர் 05 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச அலுவலகங்களில் விசேடதேவையுடையோருக்கு அணுகு வழிப்பாதையை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகுமென, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில், நேற்று (04) நடைபெற்ற சமூகமட்ட கலந்துரையாடலின் போது, உரையாற்றுகையிலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது தொடர்ந்துரையாற்றிய அவர், “விசேடதேவையுடையோர் பெண்கள், சிறுவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகள் பற்றி சட்டத்தில் மிக தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
“அதாவது, விசேட தேவையுடையவர்களுக்கு அரச அலுவலங்களில் விசேட ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும். இவ்வாறு செய்வதால், அவர்கள் தங்கு தடையின்றி அவர்களின் தேவைகளை செவ்வனே செய்து கொள்வார்கள்.
“மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில், அரச அலுவலகங்களில் இந்த அணுகுவழிப்பாதை எத்தனை அலுவலகங்களிலுள்ளன என்பது கேள்விக்குறியே.
“அரச வங்கிகளிலும் கூட இவர்களுக்கான அணுகுவழிப்பாதை அமைக்கப்படுவதில்லை. இதனால் இவர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
1 hours ago
14 May 2025