2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில்

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டப்பின் மீண்டும் அவர்கள் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரியவருகின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் உள்ள நிலையில் கடந்த வாரம் ஒரு தமிழ் அரசியல் கைதி பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து 9 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X