2025 மே 12, திங்கட்கிழமை

அரசியல் சீர்திருத்த ஆலோசனைக் குழுவின் அமர்வு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித்

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான அமர்வு, எதிர்வரும் 25ஆம் 26ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திலுள்ள டேர்பா கேட்போர் கூடத்தில் நடைபெறுமென அக்குழுச்  செயலகம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்துமூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைக் குழுவின் செயற்பாடாகும்.

உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெறுவதற்காக அமைச்சரவை அங்கிகாரத்துடன் 20 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து இந்தக் குழு அமைச்சரவைக்கு அறிக்கை, சிபாரிசுகளை தயாரித்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவுக்குச் சமர்பிக்கும்.

இது விடயமாக பொதுமக்கள் மேலதிக தகவல்களை 0112437676, 0773868563 என்ற தொலைபேசி இலக்கங்களுடனோ, 0112328780 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ constitutionalreforms @ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ www.yourconstitution.lk என்ற இணையத்தளம் மூலமோ, தபால் மூலமோ பெறமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தவிசாளர், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழுச் செயலகம், விசும்பாய, ஸ்ரேபிள்ஸ் வீதி, கொழும்பு -02 என்ற முகவரியுடனும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறமுடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X