2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

அறநெறி மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வுப் பேரணி

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்,  அ.அச்சுதன், வா.கிருஸ்ணா

தேசிய இந்துசமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, தேசிய அறநெறி விழா, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களை இணைத்ததாக இன்று (22) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்துசமய விவகார அமைச்சும் இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து, இந்த விழாவை ஏற்பாடுசெய்திருந்தன.

இதனடிப்படையில், திருகோணமலை – சம்பூர், நாவலடி சந்தியிலிருந்து நாகபிரான் ஆலய வரையில் விழிப்புணர்வு பேரணி, நேற்றுக் காலை நடைபெற்றது.

இதன்போது அறநெறி கல்வி தொடர்பிலும், இந்து சமயத்தின் மகத்துவம் தொடர்பிலும் பேரணியாகச் சென்ற அறநெறிப் பாடசாலை மாணவர்கள், வாசகங்களை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பிச் சென்றனர்.

இதில் திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மூதூர் கிழக்கில் உள்ள அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இதேவே​ளை, மட்டக்களப்பு – கல்லடி, உப்போடையில் உள்ள விபுலானந்தர் ஞாபகார்த்த மண்டபத்தில், விசேட பூஜைகள் நடைபெற்று, சுவாமி விபுலானந்தரின் சமாதியில் மலர் தூபி வழிபாடுகளில், அதிதிகள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஈடுபட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .