2025 மே 07, புதன்கிழமை

அலிஸாஹிர் மௌலானா இலண்டன் பயணம்

Niroshini   / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இங்கிலாந்தில் இம்மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய உள்ளூராட்சி நிர்வாக 20ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இன்று திங்கட்கிழமை இலண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ள தலைவர்கள் பல்வேறுபட்ட உள்ளூராட்சி நிர்வாக முறைமைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.

அத்துடன் இங்கிலாந்து உள்ளூராட்சி மன்ற அமைப்புக்களின் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஐரோப்பாவில் அகதிகளின் நெருக்கடிநிலை குறித்து கையாளுதலில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு' எனும் தலைப்பில் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுநலவாய உள்ளூராட்சி நிர்வாக மாநாடு இடம்பெறுவதற்கு முன்னதாக பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவுடனான சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நிகழ்வுகளிலும் அலிஸாஹிர் மௌலானா அழைக்கப்பட்டுள்ளார்.

அலிஸாஹிர் மௌலானா பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X