Suganthini Ratnam / 2016 ஜூலை 01 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அல்-ஹாபிழ்களை (அல்-குர்ஆன் மனனம் செய்தவர்கள்) ஒன்றிணைக்க கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் மூலம் ஹாபிழ்களுக்கான கொடுப்பனவு மற்றும் பிரயோசனமான பெரும் நிகழ்வுகள், கருத்தரங்குகள் என்பன இடம்பெறவிருக்கின்றன.
விரைவில் அதற்கான விண்ணப்பப்படிவங்கள் மூன்று மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட்டு அதனைப் பெற்று அனைவரையும் இணைந்து கொண்டு பிரயோசனம் அடைவதுடன் மற்றவர்களுக்கும் பிரயோசனம் அடைய வழிவகுக்குமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார். எனவே, மூன்று மாவட்டங்களிலும் இருக்கும் ஹாபிழ்கள் தங்கள் பெயர் விவரங்களை எதிர்வரும் 10.07.2016 க்கு முதல் media.eastcm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படு:கின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு 077 -1276680 என்ற அலைபேசி மூலம் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025