Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, இன்று (18) இடம்பெற்றபோது, சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ஆசனங்களில் ஏறி நின்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, சபையின் மேயர், சபையை ஒத்திவைத்தார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம், மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வேளையில், சபையின் மாதாந்த வரவு - செலவு அறிக்கை தமக்கு வழங்கப்பட வேண்டுமென்று உறுப்பினர்கள் கோரியதையடுத்து, அதனை வழங்க முடியாது என்றும், நிதிக்குழுவுக்கு மாத்திரமே வழங்க முடியுமெனவும், மாநகர மேயர் தெரிவித்ததையடுத்து, இவ்வாறு ஆசனங்களின் மேல் ஏறி நின்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சாய்ந்தமருது சுயேட்சைக் குழு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே, இவ்வாறு ஆசனங்களில் ஏறி நின்று, தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மேயரின் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரிடம் முறையிடுவதற்காக மகஜர் ஒன்றையும் தயாரித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago