எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

30.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம், ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மௌலானாவால் இன்று (09) திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பண்பு, அறிவு, வலுமிக்க, மனித நேய மாணவச் சந்ததியினரை உருவாக்கும் நோக்கில், கல்வியமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இந்த ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எஸ்.உமர்மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்கான ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எஸ்.சரிப்தீன் உட்பட வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்வி அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025