2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Yuganthini   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிலிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆணொருவரின் சடலம், இன்றுக் காலை 10 மணிக்கு மீட்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

போரதீவு முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார். இவர், இரவு வீடுதிரும்பாததையடுத்து உறவினர்கள் இவரைத் தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல்  பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X