Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம், கனகராசா சரவணன், எச்.எம்.எம்.பர்ஸான், க.விஜயரெத்தினம்
கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் 9ஆம் குறிச்சிப் பகுதியில், ஆண்ணொவர் மீது பெட்ரோல் ஊற்றி தீயிடப்பட்டதில், அவர் ஸ்தலத்திலேயே உடல் கருகிப் பலியாகியுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தில், வாழைச்சேனை கண்ணகிபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய நாகன் சாமியன் என்பவரே பலியாகியுள்ளார்.
கொல்லப்பட்டவர், ரயில் கடவை ஊழியராகப் பணிபுரிந்து வந்தவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
விநாயகபுரம் 9ஆம் குறிச்சி வீதியில், மதுபோதையில் காணப்பட்ட கொல்லப்பட்டவருக்கும் மற்றையவருக்குமிடையில் முன்னதாக வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மற்றைய நபரான பாலசுப்பிரமணியம் ரஞ்சன் (வயது 37) என்பவர், நாகன் சாமியனை மது போத்தலால் தாக்கி, அவர் மீது பெற்றோல் ஊற்றித் தீயிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பெற்றோல் ஊற்றித் தீயிட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரை, பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் இப்பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கெனவே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நேற்று முன்தினமே (31.03.2019) சரீரப்பிணையில் வெளியில் வந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கல்குடா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
22 minute ago
51 minute ago
1 hours ago