Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின்; 'புத்தாக்கங்களின்; ஊடாக அறிவை உலகமயமாக்கல், சவால்களும் சாத்தியப்பாடுகளும்' என்ற கருப்பொருளில் 12ஆவது ஆய்வு அரங்கு மட்டக்களப்பு, வந்தாறுமூலை வளாக நல்லையா மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்பல்கலைக்கழக கலை, கலாசாரப்பீட பீடாதிபதி கே.இராஜேந்திரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது மனிதநலன் மற்றும் சமூக விஞ்ஞானம், பால்நிலை கலாசாரம் மற்றும் சமூக விவகாரங்கள், விவசாயம் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்;, மொழி, இலக்கியம், தொடர்பாடல், பொருளாதாரம், முகாமைத்துவம், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றில் துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வு அரங்கில் அளிக்கை செய்யப்பட்டன.
தமிழ் மற்றும் ஆங்கிலமொழிகளில் எழுதப்பட்ட 50 ஆய்வுக்கட்டுரைகளிலிருந்து துறைசார்;ந்து நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட 39 கட்டுரைகளே அளிக்கை செய்யப்பட்டன.

1 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
8 hours ago