2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

ஆற்றில் மண் அகழ்ந்த குடும்பஸ்தர் மரணம்

Princiya Dixci   / 2021 ஜூன் 02 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு-  மயிலவெட்டுவான், வீரக்கட்டு ஆற்றில் மண் அகழ்வில் ஈடுபட்டிருந்த தொழிலாளியொருவர், நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான், கோரகல்லிமடு பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய கதிரேசு கங்கேஸ்வரன் என்பவரே, இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீரக்கட்டாற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் மண் அகழ்ந்து வள்ளத்தில் ஏற்றிவிட்டு,  கரையிலுள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் உதவியுடன் கரை திரும்பும்போது, இவர் நீரில் மூழ்கியுள்ளார்.

சில மணி நேரத்தில் ஆற்றிலிருந்து இவர் மீட்கப்பட்ட போது மூச்சையிழந்து காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸிர், சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தைப் பார்வையிட்டுள்ளார்.

குடும்பஸ்தரின் சடலம், பிரேத மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X