Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 06 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
“அதிகாரங்களை வைத்துக் கொண்டுள்ள ஆளுநரின் ஆட்சியில், கிழக்கு மாகாணம் எந்த வித அபிவிருத்திகளும் இல்லாது முடங்கிப் போயுள்ளது” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆதங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து, நேற்று (05) மாலை ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாகத் தொடர்ந்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர்,
““ஆளுநரின் தலைமையின் கீழ் புதிதாக அபிவிருத்திகள் எதுவும் ஆரம்பிக்கப்படாதது ஒருபுறமிருக்க, ஏற்கெனவே எம்மால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் முடிவடையாமல் முடங்கிப்போயுள்ளன.
“கொந்தராத்துக்களை மேற்கொண்டவர்கள், அப்பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அபிவிருத்திக்கான பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கின்ற பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது.
“2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றது போன்று, ஆளுநரின் பக்கச் சார்பாக அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டுப் புறக்கணிக்கின்ற ஒரு நிலைமையை நாம் தற்போது காண்கின்றோம்.
“ஜனநாயகத்துக்கு விரோதமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாது மாகாண சபை நிருவாகமும் அபிவிருத்தியும் நாடாளுமன்றத்தால் முடக்கப்பட்டுள்ளன.
“மத்திய அரசு இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அரசு சுயநலத்துக்காகவே தேர்தலைப் பிற்போட்டுள்ளது.
“கிழக்கிலே ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கின்ற போது, கிழக்கு மாகாண ஆசிரியர்கள், வெளி மாகாணங்களுக்கு வீசப்பட்டுள்ளார்கள்.
“இவ்வேளையில் தற்போதிருக்கும் திராணியற்ற மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.
“கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனம் திட்டமிடட்ட முறையில் தாமதப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகின்றது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
5 hours ago