Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 ஜனவரி 05 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஆளுநர் நியமன விடயத்தில் தமிழ் தலைமைகள் தொடர்ச்சியாக எடுத்த முடிவுகளே காரணம் என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக, ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிட்டுள்ளதாவது,
தான், கிழக்கு அபிவிருத்தி அமைச்சை எடுத்தமைக்குத் துள்ளி குதித்து துரோகிப் பட்டம் சூட்டும் அளவுக்குச் சென்றதாகவும் இன்று, ஊருக்கு ஒரு அமைச்சர் என்ற நிலை, முஸ்லிம் மக்கள் மத்தியில் உருவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது அவர்களது அரசியல் சாணக்கியம் என்றும் அவர்கள், இந்த நாட்டை யார் ஆண்டாலும், தங்கள் இனத்தை வாழ வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இராஜதந்திரமாகச் செய்து வருகின்றனர் என்றும் கூறிய அவர், அவர்கள், அபிவிருத்திக்காக போராடி எந்த உரிமையையும் இழக்கவில்லை என்றும் ஆனால் கிழக்கில் எம் மக்களின் நிலை இரண்டுமற்ற நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
கடந்த வருடம் இடம்பெற்ற அரசியல் பிரலயத்தையடுத்து, ஜனாதிபதி எடுத்தத் தீர்மானங்களுக்கு, தமிழ் தலைமைகள் முட்டுக்கட்டையாக இருந்துள்ளனர் என்றும் அதிலும், ஜனாதிபதி, தன்னுடைய தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாவிடினும் எதிர்க்க வேண்டாம் என்று கூறியும், தமிழ் தலைமைகள் அதனை எதிர்த்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை இதன் பிரதிபளிப்பாகவே, இன்று ஜனாதிபதி இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுத்தாரா அல்லது சு.கவை வளர்க்க வேண்டும் என்ற நிலையில், அப்பதவியை வழங்கினாரா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
உண்மையிலேயே, இன்று கிழக்கு தமிழர்களின் இருப்பு என்பது, கேள்விக்குள்ளான நிலையிலேயே உள்ளது என்றும் இதற்கு, தமிழ்த் தலைமைகளே பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசியம், தேசியம் என்று மாத்திரம் பேசிக்கொண்டிருந்தால் அது எமது மக்களுக்கு முழுமையான தீர்வை தராது என்று குறிப்பிட்டுள்ள அவர், உரிமை சார்ந்த அரசியலுடன், எமது மக்கள் தினமும் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கில் இன்று எத்தனையோ அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தமிழர்களுக்குக் கிடைப்பது என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்துள்ளது என்று கூறிய அவர், இதை எவ்வாறு எமது மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை பெற்றி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ, ஆளுநர் நியமன விடயத்தில் ஜனாதிபதிக்கு முழு அழுத்தத்தைக் கொடுத்து, கிழக்கு மக்களின் இருப்பைக் காப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago