2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆழ்கடலில் படகு மூழ்கியது மூவர் தப்பினர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கடந்த பத்தாம் திகதி வாழைச்சேனை, ஹைராத் பள்ளிசாயல் துறையிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆழ்கடல் படகு காற்றின் வேகத்தால் கடலில் மூழ்கியதுடன், அதில் பயணம் செய்த மூன்று பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை 10.10.2020 திகதி, வாழைச்சேனையில் இருந்து தொழிலுக்காக சென்ற படகு கடலில் காற்றின் வேகம் அதிகமாக காணப்படுவதாக வானொலி செய்திகளை தொடர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருகோணமலைக்கு எதிராக வாழைச்சேனை கடற்பரப்பிலிருந்து 57 கிலோ மீட்டருக்கு அப்பால் இப்படகு ஆள் கடலில் மூழ்கியுள்ளது.

இது தொடர்பாக படகின் உரிமையாளர் ஜே.எம். பாயிஸ், திங்கள் கிழமை இரவு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தார்.

படகினதும் படகில் உள்ள பொருட்களின் மொத்த பெறுமதி 30 இலட்சம் ரூபாய் என்றும் படகில் சென்ற மூன்று பெரும் நேற்று முன்தினம் மாலை கரை வந்து சேர்ந்ததாகவும் படகின் உரிமையாளர் ஜே.எம். பாயிஸ் தெரிவித்தார்.

இப்படகு வாழைச்சேனை அல் அமான் படகு உரிமையாளர் சங்கத்தின் அங்கத்துவம் பெற்ற படகு என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .