Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 17 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காணிப் பதிவகத்துக்கான ஆவணம் பதிவு செய்தலின் ஒரு நாள் துரித சேவை அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் மா.உதயகுமார் தலைமையில், நேற்று (16) நடைபெற்றது.
ஆவணங்கள் பதிவு செய்தலின் ஒரு நாள் சேவை, சர்வதேச தரத்தின்படி தயாரிக்கப்படுகின்ற புதிய பிறப்புச் சான்றிதழ்கள், காணிப் பத்திரங்களை (உறுதிகள்) விநியோகிக்கின்ற இச்சேவையை, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இதேவேளை, “இன்று போய் நாளை வா” என்று அரசாங்க அதிகரிகள் சொல்கின்ற நிலைமையை மாற்றுகின்ற சந்தர்ப்பத்தை, இந்த அரசாங்கம், மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக, இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விவசாய நீர்ப்பாசன மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், ஒரு தேவைக்காக மக்கள், அரச உத்தியோகத்தர்களிடம் வந்தால், “அதனை வைத்து விட்டுச் செல்” அல்லது “கோவையில் கட்டிவிட்டுச் செல்”, “நாளை வா”, “நாளை மறுதினம் வா”, “அடுத்த வாரம் வா” அல்லது “தொலைபேசியில் சொல்வோம்” என்றெல்லாம் சொல்வதற்குப் பழக்கப்பட்டுப் போன விடயத்தை மாற்றி, உடனடியாக மக்களுக்குச் சேவையை வழங்குகின்ற இந்த வேலைத்திட்டம், மக்களுக்குப் பெரிய வரப்பிரதாசமாகும் என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சேவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் கீழ், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் எண்ணக்கருவில், பதிவாளர் நாயகம் என்.சீ.விதானகேயின் வழிகாட்டலின் கீழ், நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago