2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆஸி. செல்ல முற்பட்ட 28 பேருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

இலங்கையிலிருந்து  கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 28 பேருக்கு வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட்டதுடன், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட  சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.

2012ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக பயணம் செய்த வேளை பாசிக்குடா கடலில் இவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கடற்படையினரால் குற்றப்புலனாய்வு துறையினரிடம்  கையளிக்கப்பட்ட இவர்களுக்கு எதிராக வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.

நான்கு வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியங்களின் அடிப்படையில் 28 பேருக்கும் நீதவான் ஏ.சி.ரிஸ்வான், கடந்த வியாழக்கிழமை மேற்படி   தீர்ப்பு அளித்தார்.

முதற் கட்டமாக  ரூபாய் 20 ஆயிரம்  குற்றப் பணத்தை உடனடியாக செலுத்துமாறும் மிகுதி தொகையை ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X