Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
அசாதாரண சூழ்;நிலையின்போது ஏற்பட்ட அச்சம் காரணமாக 1987ஆம் ஆண்டு; மட்டக்களப்பு, புன்னைக்குடா கடற்கரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பான்மையின மீனவக் குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை மீள்குடியேற்றுவதற்கான கலந்துரையாடல், புன்னைக்குடா பௌத்த விகாரை முன்றலில் செவ்வாய்கிழமை (6) மாலை கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்; ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இப்பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்காக காணிக் கச்சேரி; மூலமாக இதுவரையில் 65 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களுக்குரிய காணிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு, வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுமென கிழக்கு மாகாண காணி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி கூறினார்.
இதன்போது, தங்களுக்கு அனைத்து வசதிகளையும்; செய்து தரவேண்டுமென்பதுடன், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமென அக்குடும்பங்கள் கோரியுள்ளன.
இப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த 140 குடும்பங்களும் வேறு மாவட்டங்களில் தங்களின் உறவினர் வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. புன்னைக்குடா பிரதேசத்தில் இவர்களுக்குச் சொந்தமாகவிருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்ட உடைமைகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago