Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் புதிய காத்தான் குடியில் பல வீடுகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் பதுரியா பாடசாலையிலுள்ள இடைத்தங்கள் முகாமில் 98 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் இடைத்தங்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
புதிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் புதிய காத்தான்குடி பல நோக்கு மண்டப கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, இடம் பெயர்ந்த குடும்பங்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் கிராம உத்தியோகத்தர்களினால் திரட்டப்பட்டு வருகின்றன. அதே போன்று மனிதாபிமான சமூக சேவை நிறுவனங்களும் சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றன.
மேலும்,ஆரையம்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா நகர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 36 குடும் பங்களைச் சேர்ந்த 150 பேர் கர்பலா ஜும்ஆப்பள்ளிவாயலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடரந்து பெய்து வரும் அடை மழையினால் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்பலா பிரதேசத்தின் மொடன் தோட்டத்திலுள்ள பல வீடுகளும் சனிக்கிழமை இரவு வெள்ளம் ஏற்பட்டதால் மூழ்கியுள்ளன.
இதனால் தமது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்த 36 குடும்ப ங்களைச் சேர்ந்த 150 பேர் கர்பலா ஜும்ஆப்பள்ளிவாயலில் தங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago