Niroshini / 2016 மே 09 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்
பிரதேச செயலக பிரிவுமட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவு 14 பிவுகளில் போட்டியிட்டு இறுதிநிலையில் இருந்ததாகவும் இவ்வாறான நிலை ஏறக்குறைய கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் உரிய நேரத்தில் இந்தப்பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒரு விளையாட்டு உத்தியோகஸ்தர் நியமிக்கப்படாமல் இருந்தமை கவலையளிப்பதாகவும் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தப்பிரதேசம் விளையாட்டு துறையில் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம் தெரிவித்தார்.
கோவில் போரதீவு இளைஞர் எழுச்சி ஒன்றிய கலை விளையாட்டுக் கழகம் நடாத்திய விளையாட்டு விழா ஞாயிற்றுக்கழமை(08) கோவில் போரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் வே.தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பெசுகையில்,
“பிரதேச செயலகமட்டங்களில் குறிப்பிடதக்க அளவு திறமையான வீரர்களை அடையாளம் கண்டிருந்ததாகவும் அவர்களை மாவட்ட மட்டங்களில் கொண்டு செல்லும் போது அவர்கள் விளையாட்டுக்களில் மாவட்ட ரீதியாக வெற்றியீட்டவில்லை. இந்த கவலைக்குரிய விடயத்தை இந்த இடத்தில் கூறுகின்றேன். அதற்கான காரணம் அவர்களின் தொடர்ச்சியான அர்பணிப்பு,அவர்களின் விளையாட்டுப்பயிற்சி இல்லாமையே இதற்கான காரணம்.
இப்படியான நிலைகளில் இருந்து நாங்கள் மாறவேண்டும். எதிகாலத்தில் மாவட்ட, மாகாண மட்டப்போட்டிகளில் நாங்கள் சென்று வெற்றியீட்ட வேண்டும்
இன்று பாருங்கள் இந்த விளையாட்டு நிகழ்வில் இந்தப்பிரதேச பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தங்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களை இந்தப்போட்டி நிகழ்வுகளில் வெளிப்படுத்துகின்றனர். அந்தவிடயம் மிகவும் பாராட்டத்தக்க விடயம்” என்று குறிப்பிட்டார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago