Niroshini / 2016 மே 13 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பேராளிகளின் மூன்று தலைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை நான்காம் தலைமுறைக்கும் காவிச்செல்வதற்கு இடமளிக்கக் கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
கனடாவில் வசிக்கும் திருஞானசம்மந்தம் செந்தில்குமரனின் 8 இலட்சம் ரூபா நிதயுதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 17 புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கரடியனாறு பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில்,
எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்கு மாகாணம் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளது. அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் வீட்டுக்கு ஒரு போராளி என்ற நிலை காணப்பட்டது. பல மாவீரர்குடும்பங்கள் உள்ளன. ஒரு வீட்டிலே இரண்டு பிள்ளைகளை இழந்தவர்கள் வாழ்கின்றார்கள்.
வட பகுதியைப் பொறுத்தவரை முன்னாள் போராளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிகள் கிடைக்கின்றன. காரணம் அவர்களில் வீட்டுக்கு ஒருவர் வளர்முக நாடுகளில் வசிக்கிறார்கள் ஆனால் எமது பிரதேசங்களில் நுற்றுக்கு 99 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகளிலே வாழ்கின்றனர். இந்த நிலையில் எமது முன்னாள் போராளிகளுக்கு யார் உதவி செய்வார்கள் என்ற நிலை காணப்படுகிறது.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
வாழ்வாதாரத்னை உயர்த்தி அடுத்த தலைமுறையினருக்கு ஒரு பரிகாரம் செய்யும் நடவடிக்களை முன்னெடுப்பதாக இல்லை. ஒரு சிலருக்கு மூவாயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. சிலருக்கு இந்த கொடுப்பவுகூட கிடைக்கவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் கூட தங்களை இணைத்துக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago