2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரட்டைக்கொலை; மோட்டார் சைக்கிள், இரத்தக்கறை படிந்த உடைகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,பேரின்பராஜா சபேஷ் 

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன்  தொடர்புடையதாகக் கருதப்படும் கொலையாளி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் இரத்தக்கறை படிந்த உடைகளும் சனிக்கிழமை (17) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை, முள்ளிப்பொத்தானையின் 10ஆம் கொலனியிலுள்ள வீடு ஒன்றிலிருந்து இவை மீட்கப்பட்டன.
சம்பவ தினத்தன்று குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தமை அங்குள்ள வியாபார நிலையம் ஒன்றிலிருந்த சீசீரீவீ கமெராவில் பதிவாகியிருந்தது. இதை   அடிப்படையாகக் கொண்டு மோட்டார் சைக்கிளை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.  

மேலும், இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேக நபர்கள் வழங்கிய தகவலின்; அடிப்படையில் உறவினரின் வீடு ஒன்றில்; மறைத்து வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்; உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது.
ஏறாவூருக்குக் கொண்டு வரப்பட்ட தடயப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொலையாளிகளால் திருடப்பட்ட நகைகள் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கந்தளாய், முள்ளிப்பொத்தானை போன்ற இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்ததை அடுத்து அது சம்பந்தமான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சனிக்கிழமை இரவு கொலைச் சந்தேக நபர்களில் சிலர் குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X