Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சின் மூலம், இரண்டாயிரம் ஏக்கரில் கற்றாளைச் செய்கை செய்யப்படவுள்ளதாக விவசாய, நீர்பாசன, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இராஜாங்க அமைச்சரின் 06 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், ஓட்டமாவடி, கேணிநகரில் தையல் பயிற்சிநெறியை நிறைவு செய்த 14 யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு, கேணிநகர் கலாசார மண்டபத்தில், நேற்று (01) நடைபெற்றபோது,
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுளள மக்களிடம் காணிகள் இருக்கும் பட்சத்தில், கற்றாளைச் செய்கையை மேற்கொள்ள முடியுமெனவும் இதன்மூலம், பாரிய இலாபங்களை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.
அத்துடன், நெல் விளைச்சலில் கிடைக்கும் வருமானத்தையும் விடவும் கற்றாளைச் செய்கை மூலம் பாரிய இலாபம் கிடைப்பதாகவும் தெரிவித்த அவர், கற்றாளைச் செய்கையானது நாட்டில் ஒரு புதிய தொழிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதை மட்டக்களப்பு மாவட்டத்தில் விரைவில் மேற்கொள்வதற்குப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நகரப் பகுதியினரைத் தவிர்த்து, மற்றைய பிரதேசங்களில் செய்கை செய்யக் கூடியவர்கள், அரை ஏக்கர் முதல் 10 ஏக்கர் காணி உள்ளவர்கள், கற்றாளை செய்கை செய்ய முடிந்தால் பாரிய பணதைப் பெற முடியுமென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
5 hours ago
5 hours ago