2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரத்த சுத்திகரிப்பு சேவை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

கிழக்கு மாகாண சிறுநீரக நோயாளிகளின் நலன் கருதி இரத்த சுத்திகரிப்பு சேவை நிலையம் மட்டக்களப்பில் முதன்முதலாக  சென் செபஸ்தியான் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (07);; திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஜி.வி வைத்தியசாலை கொழும்பு வெஸ்டன் இன்போமரி பிரைவேட் லிமிட்டட் வைத்தியசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிலையத்தை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் சிறுநீரக மாற்று மற்றும் சிறுநீரக நோயியலாளருமான வித்தியாஜோதி றிஸ்வி சரீப் திறந்து வைத்தார்.

இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்திலிருந்து சிறுநீரக நோயாளர்கள் இரத்த சுத்திகரிப்பை மேற்கொள்வதற்காக கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களுக்குச் சென்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X