2025 மே 12, திங்கட்கிழமை

இரத்த வங்கி, உளநலப் பிரிவுகள் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, காத்தான்குடி தள வைத்தியசாலையில் பொதுமக்களின் நிதியுதவியுடன் சுமார் 05 மில்லியன் ரூபாய் செலவில் செய்துமுடிக்கப்பட்ட இரத்த வங்கி, உளநலப் பிரிவுகள் ஆகியன அடுத்த இரு வாரங்களுக்குள் திறந்துவைக்கப்பட்டு பாவனைக்கு விடப்படுமென அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபீர், இன்று திங்கட்கிழமை  தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, இந்த வைத்தியசாலையில் பால்நிலை சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பிரிவொன்று ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பிரிவை விஸ்தரிப்பதற்காக சுமார் 6.4 மில்லியன் ரூபாய் நிதியுதவியை கிழக்கு மாகாண சபை வழங்குவதற்கு  இணங்கியுள்ளது.

இதேவேளை, இந்த வைத்தியசாலையில் மின்னுயர்த்தியை  அமைப்பதற்காக சுகாதார அமைச்சிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதின் பேரில் சுமார் 100.4 மில்லியன் ரூபாவை அந்த அமைச்சிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X