Editorial / 2018 மே 09 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம், வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வாகரை - பனிச்சங்கேணியில் உள்ள இராணுவ முகாமில் இன்று (09) அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், இராணுவ முகாம் காவலரணில் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கந்தளாய் - ஜயந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பி.ஆர்.எம். நளீன் சஞ்சீவ (வயது 34) என்ற வீரரே உயிரிழந்துள்ளார்.
இவர், தனக்கு தானே துப்பாக்கிப் பிரயோகம் செய்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளாரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த இராணுவ வீரருடன் இணைந்து கடமையாற்றிய ஏனைய வீரர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம், உடற் கூறாய்வுக்காக வாகரை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
23 minute ago
6 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
6 hours ago
22 Dec 2025