2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரு யானைகள் இறப்பு

Princiya Dixci   / 2021 ஜூன் 14 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம் , கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இரு காட்டு யானைகளின் உடலங்கள், நேற்று (13) மீட்கப்பட்டுள்ளன என, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவின் கதிரவெளி வயல் பிரதேசத்திலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கரடியனாறு, கித்துள் பிரதேசத்திலும் இவ்வாறு யானைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்பவ இடங்களுக்குச் சென்று உடற் கூற்றாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் அவற்றை அடக்கம் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X