Suganthini Ratnam / 2016 நவம்பர் 04 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடிக் கிராமத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள தங்களின் காணிகளை பெற்றுத்தருமாரு கோரி நேற்றுமுன்தினம் புதன்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட மக்கள், இன்று வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றையதினம் நடைபெறவிருந்த கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக் குழுக்கூட்டத்துக்கு அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என்பதுடன், தங்களின் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று எண்ணியே பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவிக்கையில், 'இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், நல்லாட்சியில் இந்த மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காணவும் நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.

2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago