2025 மே 08, வியாழக்கிழமை

இலக்கிய விழா

Niroshini   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செலயகமும் இணைந்து நடத்தும் மாவட்ட இலக்கிய விழா  வியாழக்கிழமை (17) மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முதன்மை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது, மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட கலாசார போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்கள் உட்பட 45 பேருக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X