கே.எல்.ரி.யுதாஜித் / 2018 மே 22 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், “இலங்கையர் எம் அடையாளம்; பன்மைத்துவம் எம் சக்தி” எனத் தெரிவிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை, மட்டக்களப்பில் நேற்று (21) மாலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இத்திட்டத்தை, மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சின் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கையில், அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ரவீந்திரன், தேசிய மொழிக் கல்விப் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர். கேரத், உதவிப் பணிப்பாளர் கோபிநாத் கணேசமூர்த்தி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மும்மொழிக் கொள்கையை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவம் வகையில், இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
14 minute ago
22 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
25 minute ago
27 minute ago