Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 02 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.மோகனதாஸ்
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, இலங்கை வைத்தியர் சங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சயின் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் நிலைமை தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை வைத்திய நிபுணர்களின் சேவை பாராட்டுக்குறியது என்றார்.
இலங்கை, சுகாதார சேவைகள் வைத்திய சங்கத்தின் தீவிர நடவடிக்கையும் ஆலோசனைகளையும் ஆரம்பத்திலேயே பின்பற்றி இருந்தால், மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் இலங்கை, முற்று முழுதாக கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டிருக்க முடியும் என்றார்.
இருந்தபோதும் தற்போது, இரவு, பகலாக சுகாதாரசேவை அதிகாரிகள் வைத்தியர்கள், பொதுச் சுகாதார அலுவலர்கள், வைத்திய ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் முழு முயற்சியும் அர்ப்பணிப்புடனான சேவையுமே, இன்று இலங்கையில் கூடுதலாக நோய் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்குக் காரணம் என்றார்.
அரசியலுக்கு அப்பால் அர்ப்பணிப்புடன் கடமை புரியும் இலங்கை வைத்தியர் சங்கத்தின் சேவை பாராட்ட வேண்டிய ஒன்று எனவும் மேலும் கூறினார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago