Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் வருடாந்தம் அதிகரிப்பு காணப்படுவதாக தேசிய பாலியல் தொற்று நோய்த் தடுப்புத்திட்ட இயக்குநர், வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்தார்
சர்வதேச எயிட்ஸ் தினத்தையொட்டி, சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின்போதே, அவர் இதனைக் கூறினார்.
இரத்தப் பரிசோதனைகளின்போது, வாரத்தில் 04 பேர் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான நோயாளிகள்; கண்டுபிடிக்கப்படுவதாகவும் ஆனால், இந்த எண்ணிக்கை இதனையும் விட அதிகமாகுமெனவும் அவர் கூறினார்.
இலங்கையில் 3,600 பேர் வரையில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியிருக்கலாமென்று ஊகிப்பதாகவும் ஆயினும், 2,241 பேர் மட்டுமே இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளனவர்களில் சிலர் இரத்தப் பரிசோதனை செய்ய தயக்கம் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 587 எய்ட்ஸ் நோயாளர்களில் 357 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட ரீதியாக கொழும்பு மாவட்டத்தில் கூடுதலான எச்..ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது சுமூக நிலை காணப்படுவதால் வடக்கு - கிழக்கு மாகாணங்களிலிருந்தும் இது தொடர்பான அறிக்கைகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக இலவச இரத்தப் பரிசோதனை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் 1986ஆம் ஆண்டு முதலாவது எய்ட்ஸ் நோயாளியாக வெளிநாட்டவரொருவர் அடையாளம் காணப்பட்டார். 1987ஆம் ஆண்டு இலங்கையரொருவர் கண்டுபிடிக்கப்பட்டார் .1989இல் இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான எய்ட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் தொற்றுநோய் தடுப்புத்திட்ட பிரிவு கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
39 minute ago
58 minute ago