2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம்

Gavitha   / 2016 மே 11 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

இலங்iயில் பால் உற்பத்தியை அதிகரிக்க இந்திய கேரள மில்மா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற வறுமையை ஒழித்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் விவசாயிகளுக்கு மாடுகளை இலவசமாக வழங்கி அதன் ஊடகாக பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டத்தை முன்வைத்தே  இணைந்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் மிகப்பிரபலமான கேரள நிறுவனமான மில்மா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கே.டி. தோமஸ் தலைமையிலான குழுவினருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் இன்று  புதன்கிழமை அமைச்சின் காரியாலயத்தில் இது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது போதே இவ்விடயம் தொடர்பாக கலந்துறையாடப்பட்டது.

இலங்கையின் தேசிய பால் உற்பத்தியை அதிகரித்தல், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வறுமை நிலையை ஒழித்தல் மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள் இந்நிறுவனத்தின் தலைவரிடம் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள்விடுத்திருந்தார்.

அதற்கமைய இன்று இது தொடர்பிலான இரு தரப்பு கலந்துரையாடல் நடைபெற்றதன் பின்னர் பால் உற்பத்தி தொடர்பான தொழிநுட்ப அறிவினை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவனம் ஒன்றினை நிறுவுவதற்கும் அவர் இணக்கம் தெரிவிததுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X