Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,கே.எல்.ரி.யுதாஜித்,வா.கிருஸ்ணா
இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் பணி மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவுகள் அற்ற இலங்கை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த இலத்திரனியல் கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் அருகே இடம்பெற்ற இதன் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.உதயராஜன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் கருத்து தெரிவித்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.உதயராஜன் 'இலத்திரனியல் கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் பல் வேறு நோய்களுக்கு மனிதனும் விலங்குகளும் ஆளாகின்றன.
இந்த இலத்திரணியல் கழிவுகள் ஒழுங்கற்ற விதத்தில் வீசப்படுவதால் உணவுச் சங்கிலியுடன் இது கலக்கப்படுகின்றது. இதனால் பல நோய்களுக்கு மனிதர்கள் ஆளாகின்றனர்.
இதனை மத்திய சுற்றாடல் அதிகார சபை முறையாக சேகரித்து பதிவு செய்யப்பட்டுள்ள சில் நிறுவனங்களின் ஊடாக அதை முறையாக அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனை சேகரிக்கும் காலம் இன்று 24.10.2016 ஆரம்பமாகி எதிர்வரும் 30.10.2016 நிறைவு பெறவுள்ளது.
இந்தக்காலப்பகுதிக்குள் இலத்திரனியல் பொருட்களை பொதுமக்கள் எங்களிடம் ஒப்படைக்கலாம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
6 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
6 minute ago
12 minute ago
1 hours ago