2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இலவசக் கல்வி: ‘உதாசீனத்தால் அடிமைகளாகினர்’

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசால் வழங்கப்படும் இலவசக் கல்வியை உதாசீனம் செய்தமையால், வெளிநாடுகளுக்குச் சென்று அடிமைகளாக வாழும் நிலைமைக்கு தமிழ்ப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனரென, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி தெரிவித்தார்.

வாழைச்சேனை நாசிவந்தீவு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் பரிசளிப்பு விழாவில், அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இலவசக் கல்வியை வெற்றிகரமாக மாற்றுவதா அல்லது வியாபாரக் கல்வியை வெற்றிகரமாக மாற்றுவதா என்பதிலே, இலங்கையில் படித்த சமூகம் போரட வேண்டிய நிலைமைக்குச் சென்றிருக்கின்றார்கள்.

“அரச நிதி மூலம் இலவசமாகப் பெறக்கூடிய பட்டங்களை, பணம் வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, குறைவான காலத்தில் விரைவாகப் பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

“பொருளாதாரத்தில் பின்பட்ட எமக்கு, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான தடை உருவாகின்றது. எனவே, இலவசக் கல்வியின் பயனை நாம் உச்ச அளவுக்குக் கொண்டு வருவதாக இருந்தால், பெற்றோர்கள் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X