Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதாலா பௌன்டேசனின் அனுசரணையுடனும் தேசிய கண் வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருக்கும் இலவச கண் வைத்திய முகாம், காத்தான்குடி ஜுமைரா பீச் பலஸில் எதிர்வரும் சனிக்கிழமை (20) நடைபெறவுள்ளது.
இவ்விசேட கண் வைத்திய முகாமில் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையிலான வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை வழங்கவுள்ளனர்.
இவ்வைத்திய முகாமில் சிகிச்சை பெறுவதற்கான கண் நோயாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, அவர்களுக்கான விண்ணப்பங்களை வழங்கும் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் பயனாளிகளிடமிருந்து பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சேகரிக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இவ்வைத்திய முகாமில் காத்தான்குடி மற்றும் அதனைச்சூழவுள்ள காங்கயனோடை, பாலமுனை, ஒள்ளிக்குளம். மஞ்சந்தொடுவாய் அடங்கலாக ,ஓட்டமாவடி உட்பல பல பிரதேசங்களையும் சேர்ந்த சுமார் 450 கண் நோயாளர்கள் சிகிச்சை பெறவுள்ளனர்.
முற்றிலும் இலவசமாக முன்னெடுக்கப்படவுள்ள இக்கண்சிகிச்சை வைத்திய முகாம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் சமூக சேவைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago