2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 29 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சிறைச்சாலையில், இன்று (29) அச்சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் தலைமையில் இலவச மருத்துவ முகாமொன்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள 200 கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுச் சிகிச்சையளிக்கப்பட்டது.

சங்கத்தின் தலைவர் மகப்பேற்று வைத்திய நிபுணர் டொக்டர் கே.இ.கருணாகரன், மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.பிரபாகரன், சங்கத்தின் செயலாளர் வி.தரிசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X