2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இளம் தாய் சடலமாக மீட்பு

Editorial   / 2018 மே 05 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷாரா

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து, இளம் தாய் ஒருவர் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை விஷ்ணு கோவில் வீதியில் வசிக்கும், 24 வயதான அழகரத்தினம் டிசாந்தினி  எனும் இளம் குடும்பப் பெண்ணே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம், வீட்டின் வாசல்  கதவருகே மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்றபோது, பெண்ணின்  31  வயதான கணவனும், ஒரு வயது குழந்தையும் வீட்டில் இல்லை எனவும், அவரது அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X