2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 24 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கான பயிற்சி செயலமர்வு நாளை புதன்கிழமை மாலை பிற்பகல் மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும்; 28ஆம் திகதிவரை அவிசாவளை, பட்டங்கலையிலுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த 07ஆம் திகதி நடத்தப்பட்ட இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 10 பேர் தெரிவாகினர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 இளைஞர்களும் அம்பாறை மாவட்டத்தில் 04 இளைஞர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 03 இளைஞர்களும்; தெரிவாகிய நிலையில், இச்செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்தச் செயலமர்வின் பின்னர் இளைஞர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அங்குரார்ப்பணம் தொடர்பான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .