2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஈஸ்டர் தாக்குதல்; பெண் ஒருவர் பிணையில் விடுவிப்பு

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சி பெற்றனர் மற்றும்
அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியில் கைது
செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் பெண்ணொருவரை
பிணையில் விடுவிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல், நேற்று (29)
உத்தரவிட்டார்.

மேலும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏனைய 11 பேரையும் எதிர்வரும்
13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நேற்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிறைச்சாலையில் இருந்து பெண் ஒருவர் மட்டும் அழைத்துவரப்பட்ட நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

2019 ஏப்ரல் 19ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்ட சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேர் கைது செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் தாக்கல் செய்ய வழக்கில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டதுடன், 63
பேரில் 51 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், 11 பேர் தொடர்ந்து விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X