Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகர சபை பிரிவுக்குட்பட்ட சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களை மீளத் திறப்பது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று, காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகத்தில் இன்று (08) நடைபெற்றது.
காத்தான்குடி சுகாதார வைத்தியர் அலுவலகமும் காத்தான்குடி நகர சபையும் இணைந்து இந்தக் கூட்டத்தை நடத்தின.
இதன்போது, காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களை மீள திறப்பது தொடர்பாக ஆராயப்பட்டதுடன், அதற்கான சுகாதார வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மேலும், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்பூட்டும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யு.எல்.நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் எம்.பசீர், காத்தான்குடி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உணவகங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025