Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 08 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளத்தம்பி தவராஜா
கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராக வெள்ளத்தம்பி தவராஜா நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக என். மணிவண்ணன் நியமனம் பெற்றுள்ளார்.
இவ்விருவரும், தமது கடமைகளை இன்று (08) பொறுப்பேற்றுள்ளனர்.
இதுவரை மட்டக்களப்பு மாநகர ஆணையாளராகக் கடமை புரிந்து வந்த வெள்ளத்தம்பி தவராஜா, கிழக்கு மாகாண முதலமைச்சு செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றதை அடுத்து, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பதவி வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
தற்போது மட்டக்களப்பு மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள மணிவண்ணன், கிழக்கு மாகாண சிறுகைத்தொழில் திணைக்களப் பணிப்பாளராகப் பதவி வகித்தவராவார்.
புதிய மாநகர ஆணையாளருக்கு, மட்டக்களப்பு மாநகர கேட்போர் கூடத்தில் அம்மாநகர அலுவலர்களால் நேற்று அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
என். மணிவண்ணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
5 hours ago