George / 2016 மே 13 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில், அலுவலக உபகரணங்கள், தளவாடங்கள் என்பவற்றை சமூக அமைப்புக்களின் பயன்பாட்டுக்காக வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் அலுவலக உபகரணங்கள் மற்றும் தளவாடங்களைக் கையளித்தார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 62 சமூக அமைப்புக்களுக்கு சுமார் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணினி, அலுவலகத் தளவாடங்கள், அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டன.
ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஷா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சிவலிங்கம், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட், உட்பட அதிகாரிகளும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago