Niroshini / 2016 மே 05 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வடிவேல் சக்திவேல்
பள்ளிவாயல்களின் இமாம்கள் மற்றும் அத்தீன்களை இலவசமாக உம்றாவுக்கு அனுப்பும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட குழு நேற்று புதன்கிழமை புனித மக்கா நோக்கி பயணமாகினர்.
இதன் போது அஞ்சல் மற்றும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் மீள் குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
100 இமாம்கள் மற்றும் அத்தீன்கள் மக்காவுக்கு பயணமாகினர்.
ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேசன் நிறுவனத்தின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பேரில் சவூதி அரேபிய தனவந்தர்களின் உதவியுடன் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேசன் நிறுவனம் மேற்கொண்டு வரும் இந்த இலவச உம்றா திட்டத்தின் கீழ் 500 இமாம்கள் மற்றும் அத்தீன்கள் உம்றாவுக்கு செல்லவுள்ளனர்.
இதில் கடந்த மாதம் 100 பேர் உம்றாவுக்கு சென்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago