Niroshini / 2015 நவம்பர் 21 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி விலக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் , அவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினர்களுக்கு இரு பொலிஸாரும் ஏனையவர்களுக்கு 3 முதல் 5 வரையிலான பொலிஸாரும் ஏற்கனவே பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்,எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு உறுப்பினரான மொஹமட் பாறுக் ஷிப்லி தெரிவித்தார்.
தங்களுக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தல்கள் இருப்பதால் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழ்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் செவ்வாயக்கிழமை கிழக்கு மாகாண சபை அமர்வு கூடும் போது இது தொடர்பாக விவாதிப்பதற்காக அவசர பிரேரணையொன்றை தான் முன் வைக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாகாண உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டிருந்த பொலிஸார் ஏற்கனவே தங்கள் கடமையாற்றிய பொலிஸ் நிலையங்களுக்கு தற்போது மீளத் திரும்பியுள்ளனர்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago